காதல் திருமணம்- தந்தையே சாதி வெறியில் செய்த செயல், அதிர்ச்சியில் மக்கள்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த குப்பராஜப் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் மற்றும் இவராணி  தம்பதியினர். இவர்களது மகள் அர்ச்சனா அதே பகுதியை சேர்ந்த வேறு சாதி பையனை காதலித்து வந்தார். இதை சரவணன் கடுமையாக எதிர்த்து வந்தார். அதையும் மீறி அர்ச்சனா தன் நினைத்தவனே மணந்தார். இதை அறிந்த சரவணன் கடும் ஆத்திரம் அடைந்தார். இதனையடுத்து அர்ச்சனா ஆம்பூர் மகளீர் காவல் நிலையத்தில் மணக்கோளத்தில் தஞ்சம் அடைந்தனர்.

ஆத்திரத்தில் சரவணன் எனது மகள் 9 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இறந்துவிட்டார். அவரின் பூவுடல் 10 ஆம் தேதி குப்பராஜா சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும். இப்படிக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர் என்று பேனர் அடித்துள்ளார். பெற்ற மகள் உயிரோடிருக்கும் பொழுதே இப்படி கௌரவக் கொலைக்கு ஈடான செயலை செய்த சரவணன் எண்ணி ஆம்பூர் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

error: Alert: Content is protected !!