4 நாட்களாக கோயிலில் வைத்து கற்பழித்து கொலை செய்யப் பட்ட சிறுமி ஆசிபா வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

2018ம் ஆண்டு முழு இந்தியாவையுமே பரபரப்பாக்கிய விடயம் காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி 5 பேரால் நான்கு நாட்கள் கற்பழித்து கொலை செய்யப் பட்ட விடயம். கோயில் ஒன்றில் வைத்து கிராம தலைவரும் கோயில் பூசாரியுமான சன்ஜி ராம்.

அவரது மகன் விஷால், அத்துடன் ஆனந்த் தத்தா, மற்றும் சிறுவன் என குறித்த சிறுமி 4 நாட்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தப் பட்டு கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் கிராம தலைவரிடம் நான்கு லட்சம் ரூபா லஞ்சம் பெற்று குற்றவாளிகளுக்கு உதவியதற்காக பொலீஸார் இருவரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.

இது தொடர்பாக 15 பக்க குற்றப் பத்திரிக்கை தக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தேஜ்விந்தர் சிங் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். சாட்சிகள் மற்றும் பாதிக்கப் பட்ட பெண்ணின் மருத்துவ ரிப்போர்ட் அனைத்தும் இவர்களுக்கு எதிராக இருப்பதால் 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.

குற்றம் சாட்டப் பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார். 7வது நபரான சிறுவன் இன்னும் மைனர் என்பதால் அவனது தீர்ப்பு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இவர்களை துண்டு துண்டாக வெட்டினாலும் கோவம் தீராது என மக்கள் கூறி வருகின்றனர்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!