மாத்திரைகளை விட வேகமாக வேலை செய்யும் நம் நாட்டு மருத்துவம்

வெள்ளைப் பூண்டு, இஞ்சி இரண்டையும் சேர்த்து அரைத்து அதன் சாற்றை தேனுடன் கலந்து தினமும் 2 வேளை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரைந்து விடும்.

முட்டைகோஸ் உடன் பசுவின் வெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர உடல் தளர்ச்சி விலகிவிடும். இருமல், தொண்டை கரகரப்புக்கு போன்ற பிரச்சனைகளுக்கு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் நெஞ்சுசளி சீக்கிரம் குணமாகி விடும். பீட்ரூட் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் சரியாகும். கேரட் சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்கள் வாந்தி நின்றுவிடும்.

உடல் வலு பெறும். பித்த நோய்கள் குணமாகும். வெண்டைகாயை உணவில் அடிக்கடி சேர்த்து வருவதால் நரம்புகள் வலிமை அடையும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டுச்செய்யும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் குடிப்பதால் மாரடைப்பைத் தடுக்க முடியும். கண் பிரச்சனை உள்ளவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்து காய வைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட்டு வர கண்ணில் உண்டாகும் வெண்படலமும் மாறிவிடும்.

கடுமையான தலைவலி ஏற்ப்பட்டால் ஐந்து அல்லது 6 துளசி இலைகள் உடன் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். ஜளதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து பொடியாகி சாப்பிட்டு வர இவை சரியாகும். பிரயாணத்தின்போது வரும் வாந்தியை நிறுத்த தினம் ஒரு நெல்லிக்கனியை தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர வாந்தி வராது.

error: Alert: Content is protected !!