இன்றைய தினம் சினிமாவின் இரு பிரபலங்கள் மரணம்..! பிரதமர் மோடி உட்பட பலர் இரங்கல்..!

பிரபல நடிகரும் பிரபல கன்னட மொழி எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் இன்று இறைபாதம் அடைந்துள்ளதால் கன்னட திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்தியாவில் இலக்கியம் சார்ந்த விருதான ஞானபீடம் விருதினை பெற்றவர். அதுமட்டும் இன்றி இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். கர்நாடக மாநிலத்தில் அனைத்து ஆடம்பர நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டு துக்கத்தில் பங்குபெற்று வருகின்றனர்.

அத்துடன் கர்நாடக அரசாங்கம் இன்று அரச விடுமுறை அளித்துள்ளதுடன் மூன்று நாட்களுக்கு துக்க தினமாக அனுஷ்டிக்க தீர்மானிர்த்துள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இன்று தமிழ் சினிமாவிலும் மாபெரும் கலைஞனான கிரேஸி மோகன் அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்தார். இரு பெரும் சினிமா பிரபலங்களின் இழப்பானது நிச்சயம் பூர்த்தி செய்ய முடியாதது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்..!

error: Alert: Content is protected !!