பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரேசி மோகன் சற்று முன் மரணம்..!

பிரபல நாடக நடிகர், எழுத்தாளரும் திரைப்பட, சீரியல், நடிகருமான கிரேஷி மோகன் அவர்கள் சற்றுமுன் மாரடைப்பால் மரணமடைந்தார். ஏராளமான மேடை நாடங்கள் நடித்த இவர் பொய்க்கால் குதிரை திரைப்படத்தில் ஆரம்பித்து அண்மையில் வெளியான தேவி 2 திரைப்படம் வரை

ஏராளமான திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார். அத்துடன் கமலஹாசனின் அபூர்வ சகோதர்கள், மைக்கில் மதன காமராஜன், இந்தியன், அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம் பி பி எஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இவர் ரஜினி உட்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் கமலஹாசனுடன் தான் அதிக திரைப்படங்கள் நடித்தார். அப்துல் கலாம் அவர்களின் கையால் விருது பெற்றதே தன் வாழ்நாள் சாதனை என மகிழ்ந்தவர். அத்துடன் பல விருதுகளை பெற்று மக்கள் மனதில் நின்றவர்.

இன்று திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்ட போது ஹார்ட் அட்டாக் க்கினால் மரணமடைந்துள்ளார். திரை பிரபலங்கள் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!