இன்று மரணித்த நடிகர் கிரேஸி மோகன் 20 நாட்களுக்கு முன்பு எப்படி இருந்தார் தெரியுமா.? இதோ புகைப்படம்

தமிழ் சினிமாவிற்கு இன்று மாபெரும் இழப்பு ஒன்று இன்று நிகழ்ந்தது.. அது கிரேஸி மோகனின் மரணம். சிறந்த வசனகார்த்தாவும், நகைச்சுவை நடிகரும், மேடை கலைஞருமான கிரேஸி மோகனின் மறைவு பல பிரபலங்கங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்றைய தினம் அனைவருடனும் கதைத்து சிரித்துக் கொண்டிருந்த மோகன் காலை 11 மணியளவில் நெஞ்சு வலி என கூறியுள்ளார். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்..

ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2.00 மணியளவில் மரணமடைந்தார். இதற்கு பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஆர்த்தி 20 நாட்களுக்கு முன்பு கிரேஸி மோகனை சந்தித்து பேசியுள்ளார்.

அன்றைய தினம் ஆரோக்கியமாக இருந்துள்ளதுடன் வழமை போன்று நகச்சுவையாகவும் பேசியுள்ளார். அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த ஆர்த்தி நம்ப முடியாத மரணம் என கூறியுள்ளதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!