இரத்தசோகையா சர்க்கரை குறைபாடா இதை சாப்பிடுங்க..காணொளி இணைப்பு..

நாம் தினமும் உண்ணும் பொருட்களின் மருத்துவ குணம் தெரிந்து தான் நம் உணவில் சேர்த்துள்ளனர் நம் முன்னோர்கள். இதை நாம் தெரிந்துக்கொள்ளாமல் நாம் அதை ஒதுக்கியே உண்டு வந்துள்ளோம். அதில் ஒன்று கறிவேப்பிலை. ஆம் இதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது.

கறிவேப்பிலை சீரணத்திற்கு உதவுகிறது. இது இரத்தசோகையை சரி செய்கிறது. கறிவேப்பிலையில் துவையல் செய்து சாப்பிட்டாலோ அல்லது சாறெடுத்து குடித்து வந்தாலோ உடல் பருமன் குறையும், சர்க்கரையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும், மேலும் இரத்த சோகையை சரி செய்யும். உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் இது கொள்ளும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகம்.

வாயுத்தொல்லையை நீக்குகிறது, காலையில் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது. வாய்நாற்றத்தை சரி செய்கிறது. இதில் விட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. இது கண் பார்வைக்கு நல்லது. இதன் வாசனை மன அமைதியை தரும். தலைமுடி வளர்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. இதை உண்டாலும் இல்லை வெளிப்புறமாக தலைமுடிக்கு எடுத்துக் கொண்டாலும் தலைமுடி வளர்ச்சிக்கும் கருமையாக இருக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!