ஆண்மையைப் பெருக்கும் புதினா!!

பெரும்பாலும் நாம் அசைவ உணவு செய்யும் பொழுது அதில் புதினா கொத்தமல்லி அரைத்து ஊற்றுவோம், காரணம் இது செரிமானத்தை அதிகப்படியாக தூண்டும். புதினாவும்கொத்தமல்லிய்ம் செரிமான உற்பத்திக்கு நல்லது. இவற்றை பற்றிய மேலும் பலன்களையும் பார்ப்போம். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. மலட்டுத்தன்மையை நீக்குகிறது. வாய்நாற்றம் சரிசெய்கிறது. பசியை தூண்டுகிறது.

வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், வாயுவுத்தொல்லையை சரிசெய்யவும் உதவுகிறது. ரசத்தை வெறும் கொத்தமல்லி மட்டும் வைத்து வைக்காமல் புதினா சேர்த்து வைத்துப் பாருங்கள் வாசனை ருசி இரண்டும் தூக்கலாக இருக்கும். அப்படிப்பட்ட புதினாவை நாம் எப்படி நட்டு வளர்ப்பது என பார்ப்போம். நாம் வாங்கும்

புதினாக் கீரையிலேயே இரண்டு இலைகளை மட்டும் ஒளிச்சேர்க்கைக்காக விட்டுவிட்டு வேர் உள்ள கீரையாய் பார்த்து ஊன்றி வைத்தால் புதினா வளரும். புதினா துவையல், செய்து உண்டால் ஜீரண சக்திக் கிடைக்கும். இது ஆண்மையை பெருக்கி இல்லற வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது. வாந்தி குமட்டலுக்கு இதை இஞ்சி, டீத்தூள், கருப்பட்டி, புதினா எல்லாம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து  கொஞ்சம் எலுமிச்சை சேர்த்து பருகி வந்தால் புத்துணர்ச்சி பெறும், உடல் சூடு குறையும் குமட்டல் , வாந்தி சரியாகும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!