மீன்களை வைத்து கொலை செய்த கொடூர வட கொரிய அதிபர்

ராணுவ புரச்டி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சிக்கிய ராணுவ ஜெனரலை பிரானா மீன்களை வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்  அதிபர் கிம் ஜோங் உன் என தகவல் வெளியாகியுள்ளது.  பொதுவாக கொடூரமான தண்டனைக் கொடுப்பதில் பிரபல ஹிட்லருக்கு அடுத்து இவரை தற்பொழுது சொல்லலாம். இவர் ஆட்சிக்கு வந்த பின் 16 நபர்களை கொன்றுள்ளார் என்பதும் அனைவரையும் கொடூரமாக கொன்றுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

இவர் பீரங்கிகளை தகர்த்த பயன்படும் குண்டுகளை வைத்தும் தீயை கக்கும் துப்பாக்கிகள் மூலமாகவும் சுட்டுக் கொன்று சரித்திரத்தில் இடம் பிடித்தவர். கொடூர கொலை செய்வதில் இவர் வல்லவர். தற்பொழுது ஜெனரல் பெயர் வெளியிடவில்லை. அந்த ஜெனரலை உயிருடன் இருக்கும்பொழுதே கை கால்களை துடிக்க துடிக்க அறுத்து அப்படியே பிரானா மீன்களுக்கு இரையாக்கி உள்ளார். பிரானா மீன்கள் இரும்பையே கடித்து குதறும் ஆற்றல் கொண்டவை. இவை மனித உடலை எளிதாக கொதறி வைத்து விடும்.

சமீபத்தில் வந்த ஜேம்ஸ் படத்தில் வில்லனை பிரான மீனுக்கு இரையிடுவது போல் ஒரு காட்சி வரும். அதை கிம் ஜோங் பார்த்திருக்கக் கூடும் என நினைக்கிறேன். அதே போல் தண்டனையை நிறைவேற்றி உள்ளார். இதே மீன் ஒரு மனிதனின் உடலை எப்படி வேட்டையாடும் என யோசித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!