மகளுக்கு திருமணம் நடத்தி வைத்து தந்தை செய்த அதிரடி..! ஒரு நிமிடம் பாருங்கள்.. பின் பகிருங்கள்..!

தமிழ் நாடு காரைக்குடியை சேர்ந்த தமிழரான முத்து சேகர் ஜெர்மனியில் பணி புரிந்து வருகிறார். தனது மகளின் திருமணத்திற்காக நாடு திரும்பிய முத்து சேகர் மகளின் திருமண விழாவில் செய்த செயலானது அனைவருக்கும் ஒரு படிப்பினையாகவும் பாராட்டக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

தனது மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த திட்டமிட்ட முத்து சேகர் விருந்தினர் சாப்பிட்டு மிகுதியாகும் உணவால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை மண்டபத்தின் வாசலில் வைத்துள்ளார்.

இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி அவரே கூறியுள்ளார். வெளி நாடுகளில் இந்த இயந்திரம் இருக்கிறது.. எம் நாட்டில் இல்லை. இதனை ஒவ்வொரு திருமண மண்டப வாசலிலும் வைத்து குறைந்த தொகையை மண்டப உரிமையாளர்கள் வசூல் செய்யலாம்.

அப்படி செய்தால் உணவு மிகுதியால் வரும் துர்நாற்றம் இருக்காது.. சுகாதாரம் பாதிக்காது..அத்துடன் இதனால் மண்டபத்தினருக்கு இதனால் லாபமும் கிடைக்கிறது. இதில் 100ல் இருந்து 500 கிலோவரை கழிவுகள் போடலாம்..அப்படி போடும் போது 50% உரத்தினை தருகிறது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதனை பலா, மா, தென்னை என பலவற்றுக்கு உரமாக பயன்படுத்தலாம். என கூறி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். நல்ல விடயம் தான் யார் செய்வார்கள்..?

error: Alert: Content is protected !!