உங்க வீட்டில் தவழும் நடக்கும் குழந்தை இருக்கிறதா?உயிரைக் காக்கும் இந்த பதிவை படிங்க..

உங்க வீட்டில் தவழும் குழந்தையோ நடக்கும் குழந்தையோ இருக்கிறதா முதலில் இதையெல்லாம் செய்யுங்க உங்களின் சின்ன தடுமாற்றம் கூட குழந்தையின் உயிரைப் பறிக்கும். வீட்டில் சூடம் சாம்பிராணி போடுபவராக இருந்தால் அதை குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைய்யுங்கள்.

சூடத்தில் மிகப் பெரிய விடம் குழந்தையின் உயிருக்கே ஆபத்து. கொஞ்சம் கொஞ்சமாக கோமாவிற்கு கொண்டு சென்று பின் மொத்தமாக குழந்தையை இழந்து விட நேரிடும்.

கண்ணாடிப் பொருள், கத்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, கொசு லிக்யுட், மாத்திரை மருந்து பொருள், போன்றவற்றை தூரம் வையுங்கள். மின்சாரம் சம்பந்தப்பட்ட விடயத்தையும் தொலைவில் வைய்யுங்கள். மின் சுவிட்ச் பிள்ளைகளுக்கு எட்டாத உயரத்தில் வைய்யுங்கள்.

கைபேசி சார்ஜரைக் கூட கழட்டி வைய்யுங்கள். எதிர்பாராத விதமாய் குழந்தை வாயில் எடுத்து வைத்தால் உயிர் பிரியும் அபாயம் ஏற்படும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

மிகவும் கூர்மையான பாகம் உடைய பொருள்களை வீட்டில் வைக்காதீர்கள். உதாரணத்திற்கு சாப்பிடும் மேஜையின் விளிம்பு, தொலைக்காட்சி வைத்திருக்கும் மேஜையின் விளிம்பு போன்றவை.  ஐயர்ன் செய்து விட்டு சுவிட்ச் பிடுங்கி விட்டு ஐயர்ன் பெட்டியை எட்டி வைக்கவும் பிஞ்சு குழந்தைகளின் மிருதுவான் சருமத்தில் படாமல் இருக்க வேண்டும்.

குளிக்க வைக்க சுடுநீர் போட்டால் கொதிக்க கொதிக்க கொண்டு வந்து வைக்காதீர்கள். குழந்தைகளுக்கு நீங்கள் குழிப்பாட்டி பழகியதில் அவர்களே தவழ்ந்து போய் தொட்டியினுள் ….. என்ன மனம் பதறுகிறதா? ஆம் கவனம் வேண்டும் தவழும் அல்லது நடக்கும் குழந்தைகளுக்கு விவரம் தெரியும்.

வீட்டில் தாழ்பாள் பிள்ளைக்கு எட்டாத உயரத்தில் வைய்யுங்கள். உள்ளே சென்று விளையாட்டுத் தனமாக தாழிட்டுக் கொண்டால் திருப்பி திறக்க தெரியாது.

மிகப்பெரிய பெட்டி ஏதாவது இருந்தாலும் அதற்கு தாழ் தானாக மூடிக்கொண்டால் திறக்க முடியாமல் போனாலும் இதே தான். டெட்டால், சோப்பு, ஹார்பிக் போன்றவற்றை எளிதில் எட்டும் இடத்தில் வைக்காதீர்கள்.  ஒரு சிறிய குவளை போதும் குழந்தை உயிரைக் குடிக்க எட்டிப் பார்க்கிறேன் என்ற பெயரில் விழுந்தால் அவ்வளவு தான் மீண்டும் எழக் கூட முடியாது.

இவை அனைத்திலும் கவனமாக இருங்கள். நடக்கும் பொழுது மண் சாப்பிட நேரிடும் அதிலும் கவனமாக இருங்கள். என் வீட்டிலும் ஒன்று வைத்திருக்கிறேன் 2 வயது மண்ணை எடுத்துக் கொண்டு கதவுக்கு பின் எடுத்துக் கொண்டு போய் சாப்பிடும். இப்பொழுதே இவ்வளவு விவரம். எனவே பார்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி

உங்களில் ஒருத்தி

error: Alert: Content is protected !!