அதிரடியான உடலுறவுக்கு வந்து விட்டது ஆண்களுக்கான சிகிச்சை – பெண்கள் மட்டும் தான் கருத்தடை ஆப்பரேசன் செய்யனுமா? – வீடியோ இணைப்பு!!

இனிப்பான இல் வாழ்க்கைக்கு இன்றியமையதாக விடயமாக அமைவது தம்பதிகளுக்கு இடையிலான ஊடலும், கூடலும் தான். இந்த கூடலைப் பொறுத்த வரை பெண்கள் எதிர்நோக்கும் விளைவுகள் தான் அதிகம் என்றே சொல்லலாம். அதிகளவான ஆண்கள் – தம்பதிகள் ஆணுறை அணிந்து உடலுறவு கொள்வதை விரும்புவதில்லை. அதே போன்று உச்ச கட்ட கூடலின் போது, விந்து வெளியாகும் நேரத்தில் அவர்களால் கட்டுப்படுத்தவும் விரும்புவதில்லை. இதனால் கருத்தடை மாத்திரைகள், மற்றும் கருத்தடை ஆப்பரேசன் முதலியவற்றுக்கு பெண்கள் உட்படுகின்றார்கள்.

என்ன தான் நாம் இது நம் கம்பியூட்டர் யுகம் , நவீன டிஜிட்டல் உலகம் என்று பேசிக் கொண்டாலும், இதன் பக்க விளைவுகளும், இந்த கூடல் மூலம் வரும் பின் விளைவுகள் அனைத்தும் பெண்களுக்கே ஆகும், ஆண் தனது இன்பம் முடிந்ததும், தனக்கு பின் விளைவுகள் ஏதுமில்லை என்று நடந்து கொண்டாலும், தன் துணையினைப் பற்றிய கரிசனை இந்தக் கால இளைஞர்களிடம் வர வேண்டுமே எனும் நோக்கத்தில் இந்தக் கட்டுரையினைப் பகிர்கின்றோம்.

தம்பதிகள் தமக்கு தேவையான குழந்தைகளைப் பெற்ற பின்னர் ஆண்களும் சரி, குடும்ப உறவினர்களும் சரி வலியுறுத்துவது பெண் கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்று. ஆனால் மேலை நாடுகளில் ஆண்கள் தான் இந்த குடும்பக் கட்டுப்பாட்டினை மேற்கொள்கின்றார்கள். பெண்களை கட்டாயப்படுத்துவதில்லை. சரி ஆண்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையின் பெயர் என்ன என்று நீங்கள் கேட்கலாம். இந்தச் சிகிச்சையினை ஆங்கிலத்தில் Vasectomy என்று கூறுவார்கள். மேலதிக தகவல் வேண்டுவோர் கூகிள் செய்து அறிந்து கொள்ளலாம் / இங்கே இணைக்கப்பட்டுள்ள காணொலியினைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

இந்தச் சிகிச்சையினை உங்களது தனிப்பட்ட குடும்ப நல மருத்துவரின் பரிந்துரையுடன் மேற்கொள்ளலாம். வெறும் 10 நிமிடங்களில் எந்த வித பக்க விளைவுகளும் இன்று இந்தச் சிகிச்சையினை மேற்கொள்ளுவார்கள். சரி இந்தச் சிகிச்சையினை எவ்வாறு மேற்கொள்ளுவார்கள்? ஆண்களின் மர்ம உறுப்பில் உணர்ச்சிகளுக்கு என்று ஒரு நரம்பும், கருத்தரிப்பு நிகழ்வதற்குத் தேவையான உயிரணுக்களைக் காவிச் செல்லும் ஓர் நரம்பும் உண்டு. இதில் கருத்தரிப்பு நிகழ்வதற்குரிய உயிரணுக்களைக் காவிச் செல்லும் நரம்பினை இந்த Vasectomy சிகிச்சையின் மூலம் துண்டித்து விடுவார்கள். இதன் பின்னர் எந்த வித குடும்ப கட்டுப்பாடுகளும் இன்றி ஆண் ஒருவரால் உடலுறவில் ஈடுபட முடியும்!!. அவ்வாறு ஈடுபடும் போது விந்து வெளியேறுமா என்று கேட்டால், ஆம் நிச்சயமாக விந்து வெளியேறும். ஆனால் கருத்தரிப்பு இடம் பெறாது. இந்தச் சிகிச்சை இலவசமாக கிடைக்குமா என்றால்? ஆம் மேலை நாடுகளில் இச் சிகிச்சையினை இலவசமாக மேற்கொள்கிறார்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இந்தச் சிகிச்சை மூலம் விந்து வெளியேறுவது தடைப்படுமா? என்று நீங்கள் கேட்கலாம். கிடையவே கிடையாதுங்க. ஆண்களின் மர்ம உறுப்பினால் மேற்கொள்ளப்படும் அத்தனை செயற்பாடுகளும் இந்தச் சிகிச்சையின் பின்னும் தொடர்ந்து இடம் பெறும். ஆனால் உயிரணுக்களைக் காவிச் செல்லும் நரம்பின் தொழிற்பாடுகள் மாத்திரம் தடுக்கப்படும். ஒரு வேளை பல வருடங்களின் பின் உங்களில் யாருக்காவது மீண்டும் குழந்தை பெத்துக்கனும் என்று தோன்றினால், மீண்டும் துண்டிக்கப்பட்ட நரம்புகளை ஒன்றாக்க முடியும். இந்தச் சிகிச்சைக்கு அரை மணி நேரங்கள் செலவாகும். கட்டணம் செலுத்த வேண்டும். இப்ப சொல்லுங்க? பெண்கள் மட்டும் தான் வலியையும், வேதனையினையும் அனுபவிக்க வேண்டுமா? ஆண்கள் இலகுவான இச் சிகிச்சையினைச் செய்வதன் மூலம் இணையற்ற இன்பத்தினை அடையலாமே!! நீங்கள் என்ன சொல்றீங்க மக்கள்ஸ்?

error: Alert: Content is protected !!