குழந்தை பெற்றபின் வரும் அடி வயிறு தொப்பையை அசால்ட்டாக நீக்கலாம்..! இது பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தலாம்..!

பிரசவ தொப்பை என்பது பெண்களுக்கு சாதாரணமாக ஏற்பட கூடியது தான். குழந்தை பிறந்த பின் அடி வயிறு மட்டும் பெரிதாக இருக்கும். இது பெண்களின் அழகை கெடுத்துவிடும். ஆனால் குழந்தை பிறந்ததும் எந்த மருத்துவமும் பயன்படுத்த முடியாது..

தாய்ப்பால் கொடுக்கும் போது மருந்துகள் பயன்படுத்தினால் குழந்தையை பாதிப்பதுடன் தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும். அதனால் இன்று எந்த பாதிப்பும் இன்று தாய்ப்பால் சுரக்கக் கூடிய அதே நேரம் தொப்பையும் குறையகூடிய மருத்து குறிப்பை பார்க்கலாம். இதற்கு தேவையானவை:

கொள்ளு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காய பவுடர். முதலில் ஒரு பிடி அளவு கொள் எடுத்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள், பின் மிதமான சூட்டில் சீரகம் 1 1/2 கரண்டி, மிளகு 1 1/2 கரண்டி வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின் காய்ந்த மிளகாய் காரத்திற்கு தேவையான அளவு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் வறுத்தவுடன் அடுப்பை ஆப் செய்துவிட்டு மிளகாயுடன் சிறிது பெருங்காய பொடி சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஆற வைத்து விடுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போடடு அரைத்து பவுடர் செய்து கொள்ளுங்கள். நீங்கள் சாம்பார், ரசம், சாதப் பொடி, இட்லி பொடி, எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தி சாப்பிடலாம். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு கரண்டி எனும் சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் அனைத்துமே மருத்துவமே..

மிளகு வயிற்றுப் புண்ணை குணமாக்கும், கொள்ளு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். அதனால் பயமின்றி சாப்பிடலாம். ஆனால் அதிகம் சாப்பிட வேண்டாம் ஒரு நாளைக்கு இரண்டு கரண்டி போது. சூப்பில் கூட கலந்து இதனை சாப்பிடலாம். நீங்களும் பயன்படுத்தி மற்றவர்களும் அறிய பகிருங்கள் .!

error: Alert: Content is protected !!