நடிகர் சத்தியராஜுடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்..!

நாட்டில் தற்போது புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டிருகின்றனர். அதாவது பதவி விலகி 9 முஸ்லீம் அமைச்சர்களின் வெற்றிடங்கள் நிரப்பப் படுகின்றது. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சராக செயற்பட்ட நகர அபிவிருத்தி அமைச்சர் பதவி லக்கி ஜெயவர்தனவிற்கு வழங்கப் பட்டுள்ளது.

அதே போல் இன்னும் இரண்டு அமைச்சர்களின் பதவியும் புதிய அமைச்சர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரபல இந்திய நடிகர் சத்திய ராஜுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.

ஏன் சத்தியராஜை ரவூப் ஹக்கீம் சந்தித்தார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நேற்றைய தினம் அனிதா மேல்நிலை பள்ளியில் தமிழர் எழுச்சி நாள் கலைஞர் உதயம் நிகழ்வில் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டுள்ளார்.

இதில் கவிப்பேரரசு வைரமுத்து, சாலமன் பாப்பையா, சத்தியராஜ், மலேசிய சபாநாயகர் எஸ். ஏ. விக்னேஷ்வரன் போன்றோர் கலந்துகொண்டுள்ளனர். இதற்கான நேற்றைய தினம் சென்னை சென்ற ரவூப் ஹக்கீம் நிகழ்ச்சி முடிந்தவுடன் சத்தியராஜ் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிட தக்கது.!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!