சிங்கப்பூரை பிடிக்காதா என்ன…? ஊழியர்கள் பெருமிதம்

சிங்கப்பூரில் வேலை செய்யும் நபரில் 10 இல் 9 பேர் இங்கே இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர். 2014 ஆம் ஆண்டு கருத்தாய்வு நடைபெற்றது. அதற்கு பின் இரண்டாவது கருத்துக் கணிப்பு கடந்த வருடம் முடிய தற்பொழுது மூன்றாவது கருத்துக் கணிப்பில் 3000 நபரைக் கொண்டு நடத்தப்பட்டது. அதில் 10 இல் 9 பேர் சிங்கப்பூரில் வேலை செய்ய பிடித்திருப்பதாகவும், தன் தோழர்களுக்கு பரிந்துரை செய்ய முன்வருவதாகவும் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சிகளில் முதலாளிகளோடும் அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளோடும் அணுக்கமாய் ஒத்துழைத்து வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. இதன் முலம் தனது பொழுது போக்கு சங்கத்தை சூன்லி சாலையில் அமைத்துள்ளது. இது இலவசமாகும். வாரந்தோறும் 15000 ஊழியர்கள் இதை இந்த பொழுது போக்கு வசதியை பயன்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

error: Alert: Content is protected !!