இலங்கை தற்கொலை தாக்குதல் விலை கொடுத்து வாங்கப் பட்டுள்ளது..! நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு தகவல் .!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி கொடூர தற்கொலை தாக்குதல் நடத்தப் பட்டது. கிறித்தவ தேவாலயங்கள், மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்தே குறித்த தாக்குதல் இடம்பெற்றது. இதில் சுற்றுலா பயணிகள் 60 பேர் உட்பட 250 மேட்பட்டோர் பலியாகினார்கள்.

இந்த தாக்குதலை ஐ எஸ் ஐ எஸ் தீவிர வாதிகள் பொறுப்பேற்றனர். ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு “தெளஹீத் ஜமாத்” தலைவன் சஹ்ரான் உட்பட அவனது அமைப்பினர் உதவினார்கள். அவர்களே குறித்த தாக்குதலையும் நடத்தினார்கள்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இந்த தாக்குதல் தொடர்பாக பலரும் தங்கள் எதிர்புகளை வெளியிட்டு வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் விலை கொடுத்து வாங்கப் பட்ட ஒன்றாகவே கருதுகிறேன்.

இதனை திட்டமிட்டு வாங்கி இருகின்றார்கள். இலங்கையில் தாக்குதல் நடக்கப் போவதாக ஜனாதிபதி அவர்களுக்கு அறிவிக்கப் பட்டும் அவர் கண்டுகொள்ளாதது ஏன்.? பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு பொலீஸ் மா அதிபரை அழைக்காதது ஏன்.?

பொலீஸ்மா அதிபர் இல்லாமல் எங்கள் நாட்டில் மட்டுமே பாதுகாப்பு சபை கூட்டம் நடந்துள்ளது. தற்போது தெரிவுக் குழுவில் அளிக்கப் படும் சாட்சியங்கள் அனைத்துமே மர்மமாக இருக்கிறது. அடுத்து இலங்கையில் எதுவும் செய்யாத அப்பாவி கிறிஸ்தவர்ளை ஏன் தீவிரவாதிகள் குறிவைத்தனர்.?

இலங்கையில் கிருஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எந்த ஒரு பகையும் இல்லை. அப்படி இருக்க இது நடந்தது ஏன்? இது கண்டிப்பாக சூழ்ச்சி தான். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!

error: Alert: Content is protected !!