விஜய் டிவி பற்றி பலரும் அறியாத விடயங்கள்!! இதோ

இத்தொலைக்காட்சி 1994 முதல் முறையாக நா.பா.வா. ராமஸ்வாமி என்பவரால் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சி என்ற பெயரில் இருந்தது. அதன் பின் விஜய் மல்லையா, பாக்ஸ் சர்வதேச சேனல்கள் என பல கை மாறி தற்போது ரூபர்ட் முர்டோகின் என்னும் ஸ்டார் நிறுவனத்தால் 2001 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது.

அப்பொழுதிலிருந்து ஸ்டார் விஜய் என மாறப்பட்டது. அதன் பின் 2001முதல் 2017 வரை ஸ்டார் விஜய் என ஆங்கிலத்தில் இருக்கும். 2017 இலிருந்து ஸ்டார் விஜய் என்பதை தமிழிலே மாற்றி இருக்கிறார்கள். இதில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளுமே புதுவிதமானவை. மற்ற அனைத்து தொலைக்காட்ச்சியும் இவர்களின் நிகழ்ச்சியைத்தான் அப்படியே எடுத்திருப்பார்கள்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

முதலில் அறிமுகப்படுத்திய பெருமை விஜய் டிவியை சாறும். இந்த சேனலில் வருபவர்கள் எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள். சிவகார்த்திகேயன், சந்தானம், ம.க.பா போன்றவர்கள், டி.டி, கோபினாத் போன்ற பிரபலங்கள் அனைவரும் விஜய் டிவி மூலம் அறிமுகமானவர்களே.

விஜய் தொலைக்காட்ச்சியில் ஜோடி நம். 1 நிகழ்ச்சியில் சிம்புவும், பப்லுவும் சண்டையிட்டுக் கொள்வது போல் ஒரு வீடியோ அப்பொழுது வைரலானது அதற்கு பப்லு அது stage fixing என்றும் சிம்பு அது உண்மையில் நடந்தது எனவும் மாற்றி மாற்றி கருத்து தெரிவித்தனர் எது உண்மை என தெரியவில்லை.

தற்பொழுது சீரியல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஆக்கிரமித்த நிலையில் விஜய் தொலைக்காட்சி பார்வையாளர்கள் குறைந்திருக்கிறார்கள். இருப்பினும் மக்களுக்கும் விஜய் தொலைக்காட்ச்சிக்கும் உள்ள நெருக்கம் வேறு எந்த தொலைக்காட்ச்சிக்கும் இல்லை என்பது உண்மை.

error: Alert: Content is protected !!