பொழுது போக்கில் விஜய் மல்லையா… கொந்தளிப்பில் இந்திய மக்கள்

இந்திய வங்கிகளில் சுமார் 9,000கோடி கடன் பெற்று அதை திருப்பி தர வழி இல்லாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் கடனை சரிசெய்ய அந்நேரத்தில் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலையை அதிகரித்து நம்மை பாடாய் படுத்தியது குறிப்பிடத்தக்கது. லண்டனில் தஞ்சமடைந்த விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர மத்திய அரசு லண்டனில் கோரிக்கை விடுக்க, அதற்கு லண்டன் அரசு இந்தியாவிற்கு நாடு கட்த்த சொல்லி உத்தரவு செய்த்து.

அதை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார், எனவே அந்த கோரிக்கையை லண்டன் அரசு மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் மல்லையா இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கான கிரிக்கெட் பார்க்க ஓவல் மைதானத்திற்கு காண வந்த பொழுது வழியில் செய்தியாளர் பார்த்து இந்தியாவிற்கு எப்பொழுது வருவீர்கள் என்று கேட்க

மல்லையா கோவத்தோடு “நான் இங்கே விளையாட்டு காண வந்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு வேறு ஏதும் பேசாமல் வேகமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இவருக்கான பணத்தை நாம் கட்டிக் கொண்டு இங்கே கவலையில் இருக்க இன்றளவும் நிம்மதியாய் பொழுது போக்கில் ஈடுபட்டுக் கொண்டு இன்னும் இந்தியா வராமல் கடனையும் அடைக்காமல் தைரியமாய் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பது மக்களின் மத்தியில் கோவத்தை வரவைத்துள்ளார்.

இவரைக்கண்ட இந்திய மக்கள் திருடன் திருடன் என முழங்கினர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!