இலங்கையில் இரு முஸ்லீம் குழுக்களிடையே மோதல்..! மூவர் வைத்திய சாலையில் அனுமதி..!

அனுராதபுரம் கெப்பத்திகொல்லாவ பகுதியில் நேற்று இரவு இரு முஸ்லீம் குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கெப்பத்திக்கொல்லாவ பள்ளிவாசல் அருகில் இடம் பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் பற்றிய தகவல் வழங்கிய நபர்கள் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எல்லவெவ வீடொன்றில் ரமழான் பெருநாள் விருதொன்றில் கலந்துகொண்ட போது குறித்த இரண்டு குழுக்களுக்குமிடையில் பேச்சு வார்த்தை முற்றியுள்ளது…

இதனை தொடர்ந்து விருந்தை முடித்துக் கொண்டு இரு குழுக்களும் வெளியேறிய நிலையில் பள்ளி வாசல் அருகில் வைத்து மோதல் நடந்துள்ளது. வாய் தகறாறு அடி தடிதடியில் முடிந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

பொலீஸார். தீவிர வாதத்துடன் தொடர்புடைய தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பினர் அப்பாவி முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!