வெளியாகியது பிக் பாஸ் 3 வீட்டின் புகைப்படங்கள்..! இதோ உங்களுக்காக..!

பிக் பாஸ் சீசன் 3 இந்த மாதம் 23ம் திகதி ஒளிப்பரப்பாகும் என விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. இதற்காக பலரும் காத்திருக்கும் நேரத்தில் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இன்னும் உறுதிப் படுத்தப் படாத போதும் போட்டியாளர்கள் பற்றிய சில தகவல்கள் கசிந்து வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் செட் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தது. பிக் பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளர்களுக்கு அதிக சலுகை வழங்கப் பட்டது. இம்முறை எந்த எந்த ஒரு சலுகையும் வழங்கப் பட மாட்டாதாம்.

சீசன் இரண்டி இருந்த ஜெயிலில் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள், அது அவர்களுக்கு கொடுக்கப் பட்ட தண்டனையாக இல்லாமல் விருந்தினர் அறை போல் இருந்தது. ஆனால் இம்முறை அப்பிடி இல்லையாம். இரண்டு சிறை உள்ளதாம் ஒன்று பெரிய குற்றம் செய்தவர்களுக்காம் மற்றையது கடந்த சீசனில் இருந்தது போல் ஒன்றாம்.

இம்முறை கடந்த முறையை விட செட் பெரிதாக உள்ளதாம்,அத்துடன் டாஸ்கள் அனைத்தும் இம்முறை கடினமானதாக இருக்கப் போகிறதாம். புகைப்படங்கள் வெளியாகி இதே போல் தான் இம்முறை பிக் பாஸ் வீடு இருக்குமாம்..! பார்க்கலாம் என்ன நடக்கும் என..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!