மரணத்தை அறிந்திருந்தாரா கிரேஸி மோகன்..? மரணமடைய சில நிமிடத்திற்கு முன்பு இதை தான் கூறினாராம்..!

நேற்றைய தினம் கிரேஸி மோகன் உயிரிழந்த சம்பவம் இன்றளவும் பல பிரபலங்கள் அதிர்ச்சியில் இருந்து மீழமுடியாது தவித்து வருகின்றனர். இதறக்கான காரணம் கிரேஸி மோகன் உடனான நெருக்கம் தான்.

இன்றளவும் பல படங்களின் நாம் பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் பல நகைச்சுவை வசனங்களுக்கு சொந்தக் காரார். குறிப்பாக கமலஹாசனின் திரைப்படங்களின் நகைச்சுவை 75% இவரையே சேரும். நடக கலைஞராகிய இவரது வெண்பாக்கள் சற்று வித்தியாசமானது.

அதே போல் இவரது பேச்சும் அணுகு முறையும் அப்படி தான். வளர்ந்து வரும் கலைஞர்களை பார்த்து பொறாமை படுவோர் மத்தியில் அட இப்படி செய் நிச்சயம் வெற்றி தான் என பலரை உயரத்தில் நிறுத்தியவர். இந்த நிலையில் கிரேஸி மோகன் அடிக்கடி தங்கள் நண்பர்களிடம் பேசும் போது மரணத்திற்கு வயது முக்கியமில்லை, வந்த வேலை முடிந்துவிட்டால் போயிடனும் என கூறுவாராம்

” விவேகானந்தர், பாராதியார், எல்லாம் வந்தாங்க தங்கள் வேலையை சின்ன வயதிலேயே முடிச்சிட்டு பொயிட்டாங்க” எல்லாரும் அப்பிடி தான் என கூறுவாராம். இதனை அவரது நண்பரான எஸ் வி சேகருக்கும் கூறுவாராம்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அவருக்கு நெஞ்சு வலி வருவதற்கு சில நிமிடத்திற்கு முன்பு வீட்டில் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்துவிட்டு “அவங்க அவங்க பூமிக்கு வந்த வேலை முடிஞ்சா போயிட வேண்டியது தான்” இந்த வார்த்தையை சொன்னாராம், ஆனால் அவர் வந்த வேலை முடிந்தது என யாருக்கு தெரியும்..

பேசிக்கொண்டிருக்கும் போதே நெஞ்சு வலி என்றாராம். அவ்வளவு தான் வைத்திய சாலை சென்று சில மணி நேரத்தில் இறந்து விட்டாராம். அவர் மட்டும் தான் இறந்தார் அவரது எழுத்துக்கள் வாழும்..!

error: Alert: Content is protected !!