ஷேர் செய்தால் பேசுவேன் என ஃபேஸ்புக்கில் வைரலாகிய புகைப்படம்..! கடலூரில் பறிபோன இரண்டு அப்பாவி உயிர்கள்..!

கடலூர் நெய்வேலியை சேர்ந்த ராதிகா என்ற கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 22 வயதான ராதிகா நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை கேள்விபட்ட ராதிகாவின் தாய்மாமன் விக்னேஷ் என்பவரும் பார்வதிபுரம் பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதிகாவின் புகைப்படம் ஒன்றை ராதிகா வசிக்கும் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஆபாசமாக போட்டோஷாப் செய்து

பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். வழமை போல் ஷேர் செய்தால் பேசுவேன் என்பது போல் பதிவிட்டதால் குறித்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. இதனால் மனமுடைந்து போய் இருந்த ராதிகாவை நண்பர்கள் குடும்பத்தார் அனைவரும் சமாதானம் செய்தனர்.

இருப்பினும் அதனை அவமானமாக நினைத்துக் கொண்டிருந்த ராதிகா திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்து போன அவரது மாமா விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப் படுகிறது. அதனால் வேறு இளைஞர்களுடன் பழகுவதை தவிர்த்து வந்தார். போட்டோவை தவறாக பயன்படுத்திய இளைஞர் ராதிகா மீதான கோவத்திலேயே இதனை செய்துள்ளார். இருவரது சடலங்களையும் மீட்ட பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.!

error: Alert: Content is protected !!