தங்கள் இரட்டை குழந்தைகளை முதல் முதல் ரசிகர்களுக்கு காட்டிய சாண்ட்ரா பிரஜன்..! இதோ உங்களுக்காக..!

தமிழில் 6 மெழுகுவர்த்திகள், போராளி, சுற்றுலா, கதை திரைக்கதை, வசனம், இயக்கம், தரணி, உருமீன், சிவப்பு எனக்கு பிடிக்கும், சிங்கம் 3, எய்தவன், எந்த நேரத்திலும், காற்றின் மொழி, ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாண்ட்ரா.

ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரையுலகம் இவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தது. சினிமாவில் மட்டும் இன்று தொலைகாட்சியிலும் பிரபலமானார் சாண்ட்ரா. தமிழ் ஹிட்ஸ், அசத்த போவது யாரு, போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்,

அத்தோடு ரோஜா கூட்டம், மகான், தங்கம், மல்லி, தலையணை பூக்கள், போன்ற சீரியல்களிலும் நடித்தார். தொகுப்பாளரும் விஜய்டிவியில் ஒளிபரபாகும் சின்ன தம்பி சீரியல் ஹீரோவுமான பிரஜனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி பல வருடங்களுக்கு பின் கர்ப்பமான சாண்ட்ரா இரட்டை குழந்தைக்கு தாயானார். இது வரை குழந்தைகளை வெளியுலகிற்கு காட்டாத நிலையில் முதல் முறை புகைப்படம் எடுத்து இன்ஸ்ட்டாகிராமில் பதிவு செய்துள்ளனர். இதோ உங்களுக்காக..!

error: Alert: Content is protected !!