மூளைக்கட்டி நோயால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பிரபல நடிகை சரண்யா..!!

மற்றைய துறைகளை விட சினிமா துறையில் இருப்போர் மக்களிடம் அதிகம் பேசப் படுவார்கள். அதற்கு காரணம் திரையில் அவர்கள் மக்களை மகிழ்விப்பதே. அதிலும் ஹீரோயின்கள் அதிகம் பிரபலமாகிவிடுவார்கள். அப்படி மலையாள சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்தவர் தான் நடிகை சரண்யா சசி.

இவர் திரைப்படங்களில் சிறிய காட்சிகளில் தோன்றினாலும் சீரியல்களில் ஹீரோயினாக பிரபலமானார். ஆனால் இவரது வளர்ச்சி கடந்த வருடத்துடன் நின்றது பிரைன் டியூமர் நோயால் பாதிக்கப் பட்டார். மூலையில் இது வரை 6 முறை சத்திர சிகிச்சை செய்தும் குணமாகவில்லை.

தற்போது 7வது சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அவரின் குடும்பத்தினரிடம் போதிய பணம் இல்லையாம். 6 முறை சத்திர சிகிச்சை செய்தபோதே ஏகப்பட்ட பணம் செலவழிந்துள்ளதால் தற்போது பணம் இன்றி தவிக்கின்றனராம்.

இதனால் உதவி கோரி சரண்யா சசியின் தோழி வீடியோ வெளியிட்டுளார். அதில் சரண்யாவை வீடியோவில் காட்ட முடியாத நிலையில் இருக்கிறார். அதனால் திரையுலகில் இருப்பவர்கள் உதவுங்கள் என கேட்டுள்ளார்.!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!