இலங்கை வாழ் மக்களுக்கு அரசின் அவசர எச்சரிக்கை..!

இலங்கை மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் தேசிய அடையாள அட்டைகள் பல மீட்கப் பட்டு வருகிறது.

அந்த வகையில் ஒருவர் ஒரு அடையாள அட்டைக்கு மேல் வைத்திருதல் தண்டனைகுறிய குற்றமாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பழைய அடையாள அட்டை தொலைந்ததால் வேறு அடையாள அட்டை எடுத்த பின் மீண்டும் பழைய அட்டை கிடைத்தால் உடனடியாக பொலீஸில் ஒப்படைக்க வேண்டும்.

மீறி வைத்திருப்பது குற்றமாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் அடையாள அட்டை தவிர்த்து வேறு யாருடைய அடையாள அட்டையும் வீட்டில் வைத்திருக்க கூடாது.

அப்படி வைத்திருந்தால் அவருக்கு ஒரு லட்சம் ரூபா தண்டப் பணம் அல்லது 5வருட சிறைத்தண்டனை விதிக்க முடியும் என திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ தெருவித்துள்ளார்.!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!