வெந்தயத்தை தூள் செய்து பாலில் கலந்து குடித்தால் நடக்கும் மேஜிக் தெரியுமா.? படித்துப் பாருங்கள்..!!

வெந்தயம் என்றாலே நம்மில் பலருக்கும் பிடிக்காது. ஐயே அது கசக்கும்ல அப்பிடின்னு யாரும் பாக்காத போது தூக்கி எறிஞ்சிடுறோம். ஆனால் இந்த கசக்கின்ற வெந்தயத்தில் இருக்கின்ற இனிக்கின்ற மருத்துவ குணங்கள் என்னவென்று தெரியுமா?

அட வெந்தயம்னாலே அது சமைக்கத்தானே பயன்படுத்துவாங்க அதுல என்னங்க மருத்துவம் இருக்குதுன்னு கேக்கிறிங்களா? இந்த வெந்தயத்தில் கால்சியம் ,இரும்புச்சத்து, பொஸ்பரஸ் உயிர்ச்சத்து ஆகியன அதிகமாக்க காணப்படுகின்றன.

வெந்தயத்தை என்னென்ன மருத்துவத் தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாங்க.வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து காயங்களுக்கு மருந்தாகப் போடலாம்.

வெந்தயத்தை இட்டு கொதிக்க வைத்த வடிநீர் தொண்டை வலியைப் போக்குகின்றது. வெந்தயத்தை அரைத்து முகத்தில் தடவினால் கரும் புள்ளிகள் முகப்பருக்கள் நீங்கி சருமம் புதுப் பொலிவு பெறும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

வெந்தயத்தில் கால்சியம் அதிகம் இருப்பதால் பால்கொடுக்கும் தாய்மார்களுக்கு உகந்தது.வெந்தயத்தில் உள்ள பொஸ்பரஸ் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.வெந்தயத்தை பொடிசெய்து பாலில் கலந்து குடித்தால் ஆரோக்கியம் மேம்படும்.

வயிற்றுக்கு கோளாறுகளின் போது வெந்தயத்தை முழுங்கி தண்ணீர் குடித்தால் இந்தக் கோளாறும் இல்லாமல் போகும்.இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் நன்கு பிசைந்து பருகினால் உடல் உஷ்ணம் குறையும்

அப்பப்பா இத்தனை மருத்துவ குணங்கள் கொண்டதா வெந்தயம் என்று வியப்படைய வைக்கின்றதா? தொடர்ந்தும் இணைந்திருங்கள் இன்னும் பல மருத்துவக் குறிப்புக்கள் காத்திருக்கின்றன.

error: Alert: Content is protected !!