அதிமுகவின் தலமைத்துவ இழுபறி இன்றுடன் முடிவுக்கு வரலாம்!!

மக்களவைத் தேர்தலின் பின்னரான அதிமுக அமைச்சரவையின் முதலாவது கூட்டத் தொடர் இன்றைய தினம் இடம் பெறவுள்ளது. சமீப காலமாக ஒற்றைத் தலமையே அதிமுகவிற்கு சிறந்தது என்று ஒரு சாராரும், இல்லை இரட்டைத் தலமை தான் வேண்டும் என்று கட்சியில் சிலரும் கூறி வரும் இச் சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் நிகழவுள்ள கூட்டத் தொடரில் இது தொடர்பான பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 8ம் திகதி மதுரையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த MLA திரு. ராஜன் செல்லையா, அதிமுகவிற்கு ஒற்றைத் தலமை தான் வேண்டும் என்று, இரு தலைவர்களின் கீழ் அதிமுக போட்டியிட்ட காரணத்தினால் தான் தோல்வியினைச் சந்தித்தாகவும் கூறியிருந்தார். இது அதிமுக கட்சியின் அண்மைய பின்னடைவுக்கு காரணம் என்றும் , கட்சி உறுப்பினர்கள் அனைவரின் உதவியுடனும், பொதுக் குழுவினைக் கூட்டி, கட்சியின் தலமைப் பொறுப்பிற்கு ஏற்றாற் போல தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராஜன் செல்லையா தெரிவித்தார்.

இது வரை காலமும் நிலவி வந்த இந்த தலமைத்துவ சர்ச்சை இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!