ஊழல் செய்தால் உடனடி பதவி நீக்கம் – ஆந்திர முதல்வர் அதிரடி – பார்த்து பழகுங்கப்பா!!

ஜெகன் மோகன் ரெட்டி தலமையிலான ஆந்திர மாநில புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நேற்று முன்தினம் இடம் பெற்றது. இதில் 25 அமைச்சர்கள் புதிதாக சத்தியப் பிரமாணம் செய்து, அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்கள். இந்த கூட்டத் தொடரினைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்களை வழங்கிய அமைச்சர் “பேரணி நானே” அவர்கள் நிருபர்களிடம் கட்சியில் யாரும் ஊழல் செய்யக் கூடாது என்பதே முதல்வரின் பிரதான நோக்கமாக உள்ளது. ஆந்திராவை ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் தான் முதல்வர் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.

அமைச்சுப் பதவியில் உள்ள இரண்டரை ஆண்டு காலப் பகுதியில், யாராவது ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கட்சியில் இருந்து சஸ்பென்ஸ் செய்யப்படுவதோடு, அவர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் “பேரணி நானே” குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!