ஹிஸ்புல்லா மற்றும் சஹ்ரான் இருவரும் மக்களை ஏமாற்றி இதை எல்லாம் செய்தார்கள்..! காத்தான்குடி பள்ளிவாசல்கள் பிரதிநிதி அபூசாலி உவைஸ் பகிரங்க குற்றச்சாட்டு..!

இலங்கையில் 2017ம் ஆண்டு சஹ்ரான் ஐ எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக பகிரங்கமாக கூறினார் என காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதியும் சட்டத்தரணியுமான அபுசாலி உவைஸ் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தற்போது விசாரணை இடம்பெற்று வருகிறது. தாக்குதல் தொடர்பாக தெரிவு செய்யப் பட்டுள்ள நாடாளுமன்றத்தில் தேர்வு குழுவின் முன் சாட்சி அளிக்கும் போதே சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார்.

வெறும் 5ம் ஆண்டு மட்டுமே படித்துள்ள சஹ்ரான் மத்திரஸாக்களில் கல்வியை முழுமையாக முடிக்காமல் வெளியேறியவர். வறுமையின் பிடியில் இருந்த சஹ்ரான் 2017 ம் ஆண்டின் பின் திடீர் பணக்காரன் ஆனான்.

ஆரம்பத்தில் சஹ்ரானும் அவன் ஆதரவாளர்களும் கத்தி மற்றும் வாளுடன் மக்களை மிரட்டினார்கள் . பின் இத்தனை பலம் சஹ்ரானுக்கு எப்படி வந்தது என்பது தொடர்பில் எமக்கு இன்னும் சந்தேகம் உள்ளது என மேலும் தெரிவித்த அவர்.

காத்தன்குடியை இந்த நிலைக்கு தள்ளியதில் பெரும் பக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கும் உண்டு. காத்தான்குடியை சின்ன சவுதி அரேபியா ஆக்குவதாக கூறி அரபு மயப்படுத்தியுள்ளார். அரபு மயமாக்கல் முஸ்லீம்களின் கலாச்சாரம் அல்ல என குறிப்பிட்ட அவர் புனித குர் ஆனை தவறு இன்றி புரிந்துகொள்ளவே அரபு கற்பிக்கப் படுகிறது.

அதனால் காத்தான்குடியில் அரபு எழுத்துக்கள் அவசியம் இல்லை என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லா சஹ்ரான் அனைவரும் மக்களை ஏமாற்றி தங்கள் சுய நலத்திற்காக செயற்பட்டவர்களே என தெரிவித்துள்ளார்.

error: Alert: Content is protected !!