கிழக்கில் கொலை செய்து புதைக்கப்பட்ட காவல்துறை அதிகாரி – பின்னணியில் முஸ்லிம் தீவிரவாதிகள்?

ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணம் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் 2008ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் காணாமற் போனதாக தேடப்பட்டு வந்த காவற்துறை அதிகாரியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அத்தியட்சகர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமாகவே கொக்கட்டிச்சோலை சிவன் கோவில் வீதியில் காவல் அதிகாரி புதைக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது. மேற்படி அதிகாரியின் சடலம் நேற்றைய தினம் நீதவான் முன்னிலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு காவல் துறையினர் கொலை தொடர்பான விசாரணையினை மேற்கொள்ளச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரே இச் சம்பவம் பற்றிய விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!