துணை முதலமைச்சர் பதவி தனக்கு கொடுக்காதது ஏன்…முதல் முறை உண்மையை போட்டுடைத்த நடிகை ரோஜா.!! காரணம் இது தானாம்..!

ஆந்திராவில் இடம்பெற்ற மட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் ஒய்.எஸ், ஆர், காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.

துணை முதலமைச்சர்களாக ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என ஜெகன் மோகன் அறிவித்ததை தொடர்ந்து நிச்சயமாக நகரி தொகுதி எம் எல் ஏ நடிகை ரோஜாவிற்கு துணை முதல்வர் பதவி வழங்கப் படும் என அவரது ஆதரவாளர்கள் பலர் நினைத்தனர்.

ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்தவர்கள்..தாழ்த்தப் பட்டவர்களில் ஒருவர், பழங்குடியினரில் ஒருவர், சிறுபான்மையினரில் ஒருவர், பிற்படுத்தப் பட்டோரில் ஒருவர், காப்பு சமூகத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் என தேர்வு செய்தார்.

எந்த ஒரு முதலமைச்சரும் இப்படியான ஒரு செயற்பாட்டை இது வரை செய்ததில்லை. இது பற்றி அவர் தெளிவு படுத்தியிருந்தார். தங்கள் சமூத்தினரின் தேவைகளை அறிந்து செயற்படுத்தவே இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இது நல்ல விடயமாக இருந்தாலும் நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கூட வழங்காதது ஆதரவாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆந்திராவில் சட்ட மன்ற முதல் கூட்டத்திற்காக விஜயவாடா வந்த ரோஜா..ஏயார்போர்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

எனக்கு பதவி கிடைக்காததில் எந்த வருத்தமும் இல்லை. இம்முறை ஜாதிகளின் அடிப்படையில் பதவிகள் கொடுக்கப் பட்டது. இந்த அடிப்படையில் தான் எனக்கு பதவி கிடைக்கவில்லை. இதற்காக கட்சியை விட்டு வெளியே போகப் போவதில்லை நிச்சயம் கட்சியின் வளர்ச்சிக்கு என் முழு ஒத்துழைப்பு இருக்கும் என கூறியுள்ளார்..!

error: Alert: Content is protected !!