12 பேரால் கற்பழிக்கப் பட்டு வீடியோ எடுக்கப்பட்ட பட்டதாரி பெண் பொலீஸில் பரபரப்பு புகார்..! பொள்ளாச்சி சம்பவம் தேனியில்..!

பொள்ளாச்சி கொடூரத்தை மிஞ்சிய சம்பவம் ஒன்று தேனி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தேனி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 12 பேர் வரை பாலியல் கொடுமை செய்து வீடியோ எடுத்த செயல் அந்த பகுதியை அதிர வைத்துள்ளது.

தேனியில் பட்டதாரி பெண் ஒருவர் மெக்கனிக் ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது. ஆரம்பத்தில் கணவரின் பணம் போதுமானதாக இருப்பினும் இரண்டு குழந்தைகளின் பின் சமாளிக்க கஷ்டமாக இருப்பதாக கூறி கணவர் கேரளாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

அங்கிருந்து பணத்தை வங்கியில் போடுவதாக கூறியுள்ளார். இதனால் வங்கி கணக்கு ஆரம்பிப்பதற்காக குறித்த பெண் தனியார் வங்கி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த முத்து சிவகார்த்திக் ஏ,டி,எம் கார்ட் வந்ததும் அழைப்பினை ஏற்படுத்த வேண்டுமென குறித்த பெண்ணிடம் மொபைல் இலக்கத்தை வாங்கியுள்ளார்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க!!

அதன் பின் அழைப்பினை ஏற்படுத்தியுள்ள அவர் பி.கம் படித்திருப்பதால் உங்களுக்கு எங்கள் வங்கியில் தற்காலிக வேலை போட்டு தருகிறோம் எனவும். முகவரி ஒன்றை கொடுத்து நேர்முக பரீச்சைக்கு வரும்படி கூறியுள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை கிடைக்கும் என அங்கே சென்ற போது குறித்த பெண்ணை கட்டாயபடுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததுடன் அவற்றை வீடியோ எடுத்து மிரட்டி அவனது நண்பர்களும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

வீட்டிற்கே அவனது நண்பர்களை கூட்டிவந்து கொடூரமுறையில் பாலியல் கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளான். அதில் முத்துசிவகார்த்தி, ராஜபார்தீபன்,ஈஸ்வரன், சதீஷ், பாண்டி, என பலரும் வீடியோவை காட்டி சீரழித்துள்ளனர். கணவரிடம் சொன்னால் என்ன நடக்குமே என இருந்த பெண் இவர்களது தொல்லை முடியாமல் போடி தாலுகா பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் கணவருடன் சென்று மனு கொடுத்துள்ளார். மனுவை பார்த்த அதிகாரிகள் அதிர்ந்ததுடன். உடனடியாக 4 பேரை கைது செய்துள்ளதுடன். மற்றவர்களை அடையாளம் காட்டும்படி குறித்த பெண்ணிடம் கூறியுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.!

error: Alert: Content is protected !!