டிக் டாக் மோகத்தால் நேரலையில் விஷம் குடித்து இறந்த இளம் பெண்..! வைரலாகும் வீடியோ இதோ .!

டிக் டாக் செயலியால் இன்று பல உயிர்கள் பறிபோவதுடன் குடும்பங்களும் வீணாகிக் கொண்டிருகின்றது. தமிழ் நாடு அரியலூர் , செந்துறை வட்டம் வங்காரம் கிராமத்தை சேர்ந்த அனிதா என்கிற பெண்ணுக்கும் பெரம்பலூர், ஆலத்தூர் வட்டத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் பெற்றோர்களால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது.

இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பழனி வேலு வெளி நாட்டில் வேலை செய்து வந்துள்ளார். பழனி மற்றும் அனிதா இருவருமே குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருந்துள்ளனர். ஆனால் டிக் டாக் ஆப்பினால் அனிதா மாறியுள்ளார். எந்த நேரமும் டிக் டாக்கில் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்துள்ளார்.

இதனால் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது குளிக்க வைப்பதோ கிடையாது. இவரது வீடியோக்களுக்கு அதிக லைக் வருவதால் இவர் முழுமையாக டிக் டாக் வீடியோவிற்கு அடிமையாகி இருந்தார். இது தொடர்பாக அனிதாவின் கணவருக்கு உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதனால் மனைவியை கண்டித்துள்ளார் கணவர். ஆனாலும் கேட்காமல் அனிதா டிக் டாக்கில் மூழ்கியுள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விழுந்து காலில் இரத்தம் வந்துள்ளது. அதனை பார்த்தும் அனிதா மருத்துவமனை கொண்டு செல்லாமல் விட்டுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

குழந்தையின் காயம் பெரிதாக இருந்ததால் உறவுனர்கள் குழந்தையை கூட்டிச் சென்று மருந்து கட்டியுள்ளனர். இதை அறித்த பழனி மனைவிக்கு கால் செய்து திட்டியுள்ளார். குழந்தைகளை கனித்துக் கொள்ள வேண்டும் என கூறியதோடு டிக் டாக் செய்ய கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் அனிதா டிக் டாக் வீடியோ மூலம் அவர் பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்வதை வீடியோ மூலம் பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்த உறவுனர்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ளனர். அரியலூர் வைத்தியசாலையில் முடியாமல் திருச்சி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட அனிதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..!

error: Alert: Content is protected !!