விமல்,ரமேஷ் கண்ணா, நடிகை ஆர்த்தியின் மனுக்கள் நிராகரிப்பு..!!

தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் இப்போதே சூடு பறக்க தொடங்கியுள்ளது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கிரதாஸ் அணியும் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர்.

தற்போது இருக்கும் அணி அப்பிடியே அதே பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர். செயலாளராக விஷல், பொருளாளராக கார்த்தி போட்டியிடுகின்றனர்.

இவர்களை எதிர்த்து போட்டியிடும் பாக்கியராஜ் அணியில் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும் போட்டியிடுகின்றனர்.

கிட்டத்தட்ட 90 க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்து முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பரிசீலனை நடந்துள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதன் போது சந்தா பணம் சரியாக கட்டாததன் காரணமாக பாக்கியராஜ் அணியில் இருந்து விமல், ரமேஷ்கண்ணா, ஆர்த்தி ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!