5 வயது குழந்தையை கற்பழித்து மர்ம உறுப்பை கல்லால் சிதைத்த கொடூரனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை யாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக சிறுமியின் மர்ம பிரதேசங்களை கல்லால் அடித்து சிதைத்த கொடூரனுக்கு ஆல்வார் மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் சர்மா தூக்கு தண்டனை தீர்ப்பளித்துள்ளார்.

2005ம் ஆண்டு ஆல்வார் மாவட்டம் பெஹ்ரூர் பகுதியில் வசித்து வந்த ராஜ்குமார் என்கிற தர்மேந்திர யாதவ்…விளையாடிக்கொண்டிருந்த 5வயது குழந்தையை பாழடைந்த கட்டிடம் ஒன்றிற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன் மயங்கி விழுந்த குழந்தையின் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்தான்.

அத்துடன் அவன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியாமல் இருக்க குழந்தையின் மர்ம பிரதேசங்களையும் கல்லால் சிதைத்திருந்தான். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலீஸார் குற்றவாளியான ராஜ்குமார் என்கிற தர்மேந்திர யாதவை கைது செய்து விசாரணை செய்த பொது குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

மருத்துவ பரிசோதனையில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது இது போன்ற ஒரு கொடூரம் அரிதான மிருகத்தனமான செயல் என கூறிய நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதனால் குழந்தை திரும்பி வர போவதில்லை தான். ஆனால் இது போன்ற தீர்ப்புகள் வரவேற்கப்பட வேண்டியது.இது போன்ற தீர்ப்புகள் உடனடியாக நிறைவேற்றப் பட்டால் மகிழ்ச்சி தான்..!

error: Alert: Content is protected !!