பியூட்டி பார்லர் உரிமையாளரின் மகள் சந்தியா காதல் திரைப்பட நாயகியாகியது இப்படி தானாம்…! இப்படி கூட நடக்குமா..!!

பியூட்டி பார்லர் ஓனரின் மகளான சந்தியா தமிழ் சினிமாவின் நாயகியாக மாறியது எப்படி என்பது பற்றி காதல் திரைப்பட உதவி இயக்குனர் சிவகுமார் கூறியுள்ளார்.காதல் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடித்த சந்தியாவிற்கு அறிமுக படத்திலேயே சிறந்த நடிக்கைகான பில்ம் பேர் விருது,

தமிழ் நாடு பில்ம் ஸ்பெஷல் விருது என கிடைத்தது. இந்த திரைப்படத்திற்கு இவர் வந்தது சுவாரசியமான விடயமாம். காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் உதவி இயக்குனராக அவர் சிவகுமாருக்கு கொடுத்த முதல் வேலை 10ம் வகுப்பு படிக்கும் பெண் ஒருவர் இந்த திரைப்படத்திற்கு நாயகி..

அதனால் எந்த ஸ்கூல் வாசலில் நின்றாவது அப்படி ஒரு பெண்ணை அழைத்து வா என்றாராம். ஸ்கூல் வாசலில் நின்றால் ஈவ்டீசிங் என பொலீஸ் பிடிக்கும் என்ற பயத்தில் வட பழனி பகுதியில் பியூட்டி பார்லர்களுக்கு நடிக்க வாய்ப்பு தேடும் பெண்கள் வருவது அறிந்து ஒவ்வொரு பியூட்டி பர்லராக அழைந்தேன்.

அப்படி ஒரு இடத்தில் தான் பியூட்டி பார்லர் வைத்திருப்பவரின் மகள் சந்தியாவிற்கு திரைப்படத்தில் நடிக்கும் ஆசை இருப்பதை அறிந்தேன். உடனடியா பாலாஜி சேருக்கு காட்டியதும் அவருக்கு பிடித்து போனது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

சந்தியாவின் இயல்பான நடிப்பு காதல் திரைப்படத்திற்கு வலு சேர்த்தது… 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என கூறியுள்ளார்..!

error: Alert: Content is protected !!