கருணாவின் ஆயுத குழு உறுப்பினர் சிறையில் தற்கொலை முயற்சி…! ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதி..!

2008ம் ஆண்டு கொக்கட்டிச்சோலையில் பொலீஸ் அதிகாரி ஒருவரை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்தவர் கருணா குழுவை சேர்ந்த லிங்கம். குறித்த பொலீஸ் அதிகாரியை கொலை செய்து முனைக்காடு பொது மயானத்தில் புதைக்கப் பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்

நேற்றைய தினம் குறித்த பகுதியில் தேடுதலும் அகழ்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டது. இந்த அகழ்வு நடவடிக்கையின் போது சந்தேக நபரான லிங்கம் முனைக்காடு பகுதிக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை இடம்பெற்றது. பின் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் மீண்டும் அடைக்கப் பட்டார்.

இந்த நிலையில் கழிவறை சென்ற லிங்கம் அங்கு கழிவறை கிளீன் செய்யும் மருந்தை அருந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில் இவரை மீட்ட பொலீஸார் மட்டக்களப்பு அரச மருத்துவ மனையின் அனுமதிக்கப் பட்டுள்ளார். நிலமை கவலைகிடமாக இருப்பதாக அறிய முடிகின்றது.

பல வருடங்களாக கருணா அம்மானின் ஆயுத குழுவில் செயற்பட்டு வந்த லிங்கம் பொலீஸ் அதிகாரியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டதுடன் முனைகாடு பொது மயானத்தில் புதைத்ததாக வாக்குமூலம் கொடுத்திருந்தது குறிப்பிட தக்கது..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!