கொழும்பு மகப்பேறு வைத்தியசாலையில் முஸ்லீம் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு..!

அண்மையில் இலங்கை குருனாகலை பகுதியில் சிங்கள பெண்கள் 8000ம் பேருக்கு சிசேரியன் செய்யும் போது கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்ததாக வைத்தியர் சியாப்தீன் மொஹமட் மீது புகார்கள் குவிந்து வருகிறது.

வரவிற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கைது செய்யப் பட்ட இவர் மீது இதுவரை 900திற்கு அதிகமான புகார்கள் குவிந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் முஸ்லீம் பெண்களுக்கு கர்ப்பத் தடை சத்திர சிகிச்சை நடந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இயங்கும் மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனைகளில் ஒன்றான காசல் வைத்தியசாலையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் முஸ்லீம் பெண்களுக்கே குறித்த குடும்ப கட்டுப் பாட்டு சத்திர சிகிச்சை மேட்கொள்ளப் பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அம்பாறை நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பைசல் காசீம் முஸ்லீம் மூன்றாவது பிள்ளையை பெற்றெடுத்த பின்னர் உடல் பலவீனம் என கூறி கர்ப்பதடை சிகிச்சையை குறித்த வைத்தியசாலை

பேஸ்புக்கில் Like செய்ய!!

செய்துள்ளது என கூறியுள்ள அவர் மகப்பேறு மருத்துவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் இவை தெரியவந்ததாக கூறியுள்ளார். இந்த செய்தியை சிங்கள இணையங்களில் வெளியாகி உள்ளது..!

error: Alert: Content is protected !!