தமிழீழ விடுதலை புலிகளுடன் முஸ்லீகளை ஒப்பிட்டு பேசிய ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் அதிரடி பதில்..!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன “முஸ்லீம் மக்களிடம் இருந்து இன்னுமொரு பிரபாகரன் உருவாகலாம்” என கூறிய கருத்திற்கு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்கொலை தாக்குதல் நடத்தும் எல்லோரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. பிரபாகரன் காரணமின்றி உருவாகவில்லை மற்றும் தற்கொலை தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை அழிக்கவில்லை. பிரபாகரனுக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அது மக்களுக்கான விடுதலை போராட்டமாக இருந்தது.

அதற்கும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதலுக்கும் சிறிதளவும் ஒத்துப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விஷேட பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரபாகரன் நடத்திய போராட்டத்தை மக்கள் ஆதரித்தனர் ஆனால் குறித்த தற்கொலை தாக்குதலை மக்கள் வெறுகின்றனர்.

முஸ்லீம் மக்கள் தீவிர வாத தாக்குதல் நடத்தியவர்களை காட்டிக் கொடுகின்றனர். இந்த நிலையில் முஸ்லீம் சமூகத்தினரிடம் இருந்து இன்னுமொரு பிரபாகரன் உருவாகுவார் என ஜனாதிபதி கூறுவது மற்றைய இன மக்களை அச்சப் படுத்தி முஸ்லீம் மக்களை தவறாக காட்டுவதற்கு சமமானதாகும் என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!