யாழ்ப்பாணத்தை அண்டிய தீவு பகுதியில் அபாயகரமான வெடி பொருட்கள் இராணுவத்தினால் மீட் பு..!!!

யாழ்ப்பாண நகரப் பகுதிக்குச் சமீபமாக உள்ள தீவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிபொருட்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினரும், காவற் துறையினரும் இன்றைய தினம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை மூலம் மீட்டுள்ளார்கள்.

இன்று இராணுவத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை இடம்பெற்றது. இந்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட் தேடுதல் நடவடிக்கைகளின் போதே வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

இதனுள் டெட்டனேட்டர்கள், மற்றும் கடுமையான சேதத்தினை விளைவிக்கவல்ல சீ-4 ரக வெடிபொருட்களும் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. சம்பவம் பற்றிய மேலதிக தகவல்களை ஸ்ரீலங்காப் பாதுகாப்புப் பிரிவினர் வெளியிடவில்லை.

error: Alert: Content is protected !!