மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தீவிரவாதி சஹ்ரானின் ஆதரவாளர் கைது..!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் தீவிரவாதி சஹ்ரானின் தீவிரவாத போதனைகளை மாணவர்களுக்கு போதித்த வசீம் அஹமெட் என்பவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள குறித்த கல்வி நிறுவனத்தின் உரிமையாளர்… தனது மகள் கழிவறை சென்றதை மிகவும் நுணுக்கமான முறையில் வீடியோ எடுத்ததுடன் அங்கு கல்வி கற்க வரும் மாணவிகளையும் தவறாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும்..

அத்துடன் வகுப்பிற்கு செல்லும் அனைவருக்கும் சஹ்ரானின் போதனைகளை போதித்த பின்பே கல்வி கற்றுக் கொடுப்பதை தொடங்குவதாகவும் புகார் கொடுத்ததை தொடர்ந்து வசீம் அஹமட்டை கைது செய்த பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இன்று இந்த வழக்கை ஆராய்ந்த கோட்டை நீதிமன்ற நீதிபதி. ரங்க திஸாநாயக்க ஆசிரியர் வசீம் அஹமட்டை எதிர் வரும் 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் !

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!