திருமணமாகி மூன்றே நாளில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி..!

நல்ல காதலுக்கும் தற்கொலை செய்து கொள்வது சாதாரண விடயமாக மாறிவிட்டது. திருமணமாகி சில நாட்கள் கடந்த நிலையில் தனது காதலனுடன் மது அருந்திவிட்டு துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாம்கர் செளத்திரி என்ற 21 வயது பெண்ணுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் குறித்த பெண் அஞ்சு சுந்தர் என்கிற இளைஞனை காதலித்து வந்துள்ளார். இதனால் காதலனை சந்தித்து பேசியுள்ள செளத்ரி இருவரும் சேர்ந்து வீடியோ ஓடியோ பதிவுகளை செய்துள்ளனர்.

அத்துடன் ஏகப்பட்ட புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்துள்ளனர். இது தொடர்பாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலீஸார் சடலத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதுடன்

விசாரணையை ஆரம்பித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் திருமணத்தில் விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாய படுத்தியதால் குறித்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!