சற்றுமுன்னர் கொழும்பில் தாயும் இரண்டு பிள்ளைகளும் பரிதாபமாக பலி..!

சற்றுமுன் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இரயில் மோதி மூவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிர் இழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அழுத்கம சென்ற ரயிலில் மோதி குறித்த மூவரும் மரணமடைந்துள்ளதாக அறியமுடிகிறது. மேலதிக தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகாத நிலையில் சம்பவ இடத்திற்கு பொலீஸார் விரைந்துள்ளனர்.

இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் சரியான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாக வில்லை. அண்மை காலமாக இலங்கையில் விபத்துகளினால் ஏற்படுகின்ற மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த மரணமும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!