ஸ்ரீலங்கா காவற்துறையின் தீவிர கண்காணிப்பினுள் சஹ்ரானின் சகாக்கள்!!

ஸ்ரீலங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து காவற்துறையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் முயற்சிகள் மூலம் தற்கொலைக் குண்டுத்தாரி சஹ்ரானின் மடிக் கணினி கைப்பற்றப்பட்டது. இதனை கையகப்படுத்திய பொலீஸார் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த ஏனைய தீவிரவாதிகளையும், ஸ்ரீலங்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் என கருத்தப்படுவோரையும் கைது செய்து வருகிறார்கள்.

இதனடிப்படையில், கண்டி ஹிங்குல பகுதியில் போலீஸார் நிகழ்த்திய தேடுதல் நடவடிக்கை மூலம், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 2 நபர்களை கைது செய்துள்ளார்கள். தவிர தமிழகத்தின் கோயம்புத்தூரில் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த ஒருவரையும் இந்தியாவிற்குச் சென்ற ஸ்ரீலங்காப் பொலிஸார் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார்கள்.

error: Alert: Content is protected !!