சாப்பிடவும் வேண்டும்…உடல் எடை குறையவும் வேணுமா.? அப்போ இந்த டீ போதும்..! பானை தொப்பைக்கும் Good Bye சொல்லிடும்..!

மனிதர்களாக பிறந்தால் ஆசை இல்லாமல் இருக்குமா என்ன.? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆசை இருக்கத் தானே செய்யும்.அப்படி இன்றைய காலத்தில் அதிகமானோருக்கு இருக்கும் ஆசை உடல் எடை குறைப்பது தான். உடல் எடை அதிகம் இருந்தால் ஆசை பட்ட உணவை சாப்பிட முடியாது.

ஆசைப் பட்ட இடையை அணிய முடியாது…இப்படி பல ஆசைகளை குழி தோண்டி புதைக்க வேண்டி வரும். வாழ போறது கொஞ்ச காலம் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் நாம ஆசைப் பட்டது போல் வாழ்ந்திட்டு போவோமே…சரி அப்பிடி வாழ சூப்பரான டிப்ஸ் தான் இன்று பார்க்கப் போகின்றோம்.

அதாவது ஆசை பட்ட உணவை சாப்பிட விரும்பிய உடையை அணிய உடல் எடையை குறைக்கும் மருத்துவம்..! இது ஒரு சாதாரண டீ தான். ஆனால் கருஞ்சீரகம் சிறியதாக இருந்தாலும் அதன் பயனோ பெரிது. இந்த டீ தயாரிக்க தேவைப் படும் பொருட்கள்: கருஞ்சீரகம் 2 கரண்டி. புதினா இலைகள் ஒரு கைபிடி அளவு. இஞ்சி சிறிதளவு. தேன் இரண்டு கரண்டி.

ஒரு பாத்திரத்தில் இரண்டு லீட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைய்யுங்கள். தண்ணீர் கொதித்ததும் அதில் எடுத்து வைத்த கருஞ்சீரகத்தை போடுங்கள்.அதன் பின் இஞ்சியை தட்டி அதனுடன் சேர்க்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் புதினா இலைகளை சேர்த்து சிறிது நேரம் கொதித்த பின் இறக்கவும்.

இந்த நீரை காலையில் இருந்து மாலை வரை குடிக்கலாம். அதாவது வடித்து சிறிது தேன் கலந்து சூடாகவோ அல்லது ஆறிய பின்போ உங்களுக்கு பிடித்தது போல் கருஞ்சீரக டீ குடிக்கலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை அதே நேரம் உடல் எடையும் சூப்பராக குறைந்துவிடும்..!

error: Alert: Content is protected !!