திருச்சியில் கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த இளைஞன்! அடித்து துவைத்த மக்கள்..!

திருச்சியில் ஒருதலை காதல் விவகாரத்தில், கல்லூரி மாணவியை திருமணமான இளைஞர் குத்திக் கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர், புதிய தமிழகம் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.

இவரது மகள் மலர்விழி மீரா, கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரை, அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர், ஒருதலையாக காதலித்து வந்தார்

முரளிக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் இருப்பதால் முரளியின் காதலை மீரா ஏற்க மறுத்து விட்டார். இந்த நிலையில், கல்லூரி முடிந்து வீடு சென்ற மீராவை வழிமறித்த முரளி, எதிர்பாராத விதமாக அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

கத்தி குத்தால் அதிக காயமடைந்த மீரா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது இறந்து விட்டார்.

இதை கண்ட மீராவின் உறவினர்கள் முரளியை அடித்து உதைத்தனர்.

படுகாயம் அடைந்த முரளி அரசு வைத்தியசாலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்…!!

error: Alert: Content is protected !!