சென்னையில் 26 வயது யுவதி மீது சரமாரியாக வாள் வெட்டு..! இன்னுமொரு சுவாதியா..!?

சென்னையில் இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. சென்னை சேத்துப் பட்டு இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்த பெண்ணே இவ்வாறு அரிவாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளார்.

குறித்த இரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் இரயிலுக்காக காத்திருந்த போது திடீரென இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டு மின்சார இரயிலின் முன் பாய்ந்து குறித்த இளைஞரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இதனை அடுத்து இரயில்வே பொலீஸாரின் உதவியுடன் இருவரும் மீட்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஈரோடு பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதில் தெரியவருவதாவது..

தாக்கப் பட்ட பெண் எழும்பூர் விடுதி ஒன்றில் தங்கியிருந்து வேலைக்குச் செல்லும் 26 வயதான தேன் மொழி. இவர் இரயிலுக்காக காத்திருந்த போது அங்கு வந்த சுரேந்திரன் என்ற இளைஞன் தேன்மொழியுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சில நிமிடத்தின் பின் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு அவனும் தற்கொலை முயற்சி செய்துள்ளான். இது தொடர்பாக பொலீஸார் கூறுகையில் ஒரு தலை காதல் அல்லது காதலர்களுக்கிடையில் தகராறு காரணமாக இருக்கலாம். விசாரணை இடம்பெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்..!

error: Alert: Content is protected !!