குருநாகல் வைத்தியர் ஷாபி கரு கலைப்பு சிகிச்சை செய்யவில்லை.. வழக்கு விசாரணை நிறைவு செய்வதற்கான காரணம் என்ன..!!

குருநாகல் வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரணை செய்வதற்காக சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முற்றாக நிறைவு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.

கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றை முற்றாக பாதிக்கும் எந்த ஒரு சிகிச்சையும் செய்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர் ஷாபி சிகிச்சையில் மகப்பேறு பாதித்துள்ளதாக பல பெண்கள் முறைப்பாடு செய்திருந்தாலும் அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு முன்வர மறுப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஷாபி விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கவுள்ளனர். அதேவேளை எதிர்வரும் 27 ஆம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபி மீதுள்ள குற்றங்கள் தொடர்பாக விசாரணை இடம்பெற போவதாகவும் அவர் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

விசாரணைக் குழுவின் இந்த அறிக்கை தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள்பல குற்றங்களை தெரிவித்துள்ளனர்

error: Alert: Content is protected !!