அந்தர் பல்டி அடித்த பிரபல நடிகை ராதிகா….! சன் டிவியை விட்டு இந்த டீவிக்கு வந்து விட்டார்….!

நடிகை ராதிகா….16 வயதில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இன்று சீரியகளில் அதே ஹீரோயினாக நடித்து வருகிறார். சினிமாவில் நாயகி, தோழி, அக்கா,அண்ணி,அம்மா, பாட்டி என அனைத்து வேடங்களும் இவருக்கு அத்துப் படி.

சினிமாவை விட இவருக்கு அதிக புகழ் சின்னத்திரையில் தான் கிடைத்தது. இவரது ஒவ்வொரு சீரியல்களும் ஆஹா ஓஹோ என புகழப் பட்டது.குறிப்பாக சித்தி, அண்ணாமலை போன்ற சீரியல்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது. இதனால் சினிமாவை விட சீரியல்களில் அதிக கவனம் செலுத்தினார்.

இது வரை காலமும் சன் டிவியோடு இருந்த ராதிகா திடீரென சில நாட்கள் விலகி இருந்தார். அவரது சீரியல் நேரத்தில் வேறு சீரியல் ஒளிப்பரப்பானது.

இந்த நிலையில் ராதிகா சன் டிவியில் இருந்து ஜீ தமிழ் டிவிக்கு மாறியுள்ளார். சன் டிவியுடன் எற்பட்ட முரண்பாடு தான் இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. பிரபல சேனல்களில் இருந்து பலர் ஜீ தமிழ் டிவிக்கு வருவது தற்போது அதிகமாகியுள்ளது..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!