நடிகையாக அறிமுகமாகும் பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகள். புகைப்படம் இதோ .!!

நடிகர் விஜய் சேதுபதி இன்றைய நடிகர்களில் ஒட்டுமொத்த ரசிகர்களும் ரசிக்கும் ஒரே நடிகர். இவருக்கு என தனி ரசிகர்கள் இருந்தாலும் மற்றைய நடிகர்களின் ரசிகர்களும் இவரோடு போட்டி இன்றி இவரது திரைப்படங்களை இவரது நடிப்பை ரசிப்பார்கள்.

ஆரம்பத்தில் இவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆகியது. ஆனால் அண்மைகாலமாக கொஞ்சம் சறுக்கல் என்று தான் சொல்லவேண்டும். ஆனாலும் அவருக்கான வாய்புகள் குறையவில்லை. இந்த நிலையில் சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் விஜய் சேதுபதி அவர்களின் மகளும் நடிகையாகிறாராம். ஏற்கனவே நானும் ரவுடி தான் திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சிந்து பாத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகள் சங்கத் தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கு வருகிறாராம்.

இயக்குனர் கேட்டதால் மகளுக்கும் நடிப்பதற்கு விருப்பம் இருப்பதாலும் குழந்தையின் ஆசைக்கு ஓகே சொல்லிவிட்டாராம் விஜய் சேதுபதி. பார்க்கலாம் தந்தையை போல் இருவரும் சினிமாவில் ஜொலிப்பார்களா என்று..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!